Search This Blog

Showing posts with label Agathi spinach. Show all posts
Showing posts with label Agathi spinach. Show all posts

22 April 2012

கருவளையமா? – எளிய தீர்வு அகத்தி!

முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.

சாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.

30 March 2012

ஆண்மையை அதிகரிக்க அகத்தி கீரை


இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.

அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக அரைக்கீரை உதவும்.  வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.
பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.