Search This Blog

21 November 2012

விண்ணில் பாயும் இலங்கையின் முதல் செயற்கைக் கோள்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இன்று வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண்டு ஜூன் மாத்தின் பின்னர் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு மைய வேலைகள் கண்டி – பல்லேகலவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழன் முதல், தனக்கென சொந்தமாக தொலைத்தொடர்பு சற்றலைட் வைத்திருக்கும் நாடுகளில் 45ஆவது இடத்தினையும் ஆசியாவில் 3ஆவது இடத்தினையும் இலங்கை பெறவுள்ளமை சிறப்பானதாகும்.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்த தொலைத்தொடர்பு சற்றலைட் உள்ள நாடு என்ற பெருமை இலங்கையைச் சாரவுள்ளது.

சீன ஏவுதளத்தில் தயார்நிலைப்படுத்தப்படும் இலங்கையின் புதிய தொலைத்தொடர்பு சற்றலைட் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

17 November 2012

முஹர்ரம் பத்தாம் நாளில் செய்யும் நல் அமல்கள் – ஆஷுரா நோன்பு

முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி(ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் – யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான்; உயிருடன் இருந்தால் 9ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள். இதனால் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

13 November 2012

இறைச்செய்தியின் ஆரம்பம்

ஆயிஷா(ரலி) கூறினார். 
"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள். 
"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, 
'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார். 
'வராக' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா(ரலி), 'என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரகா நபி(ஸல்) அவர்களிடம், 'என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி(ஸல்) அவர்களிடம்) 'இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய 'நாமூஸ்' (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!' என்றும் அங்கலாய்த்தார். 
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் 'ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்' என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று.