Search This Blog

11 June 2013

சுபஹு தொழுகையின் முக்கியத்துவம் (Importance of Subah)

யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?” இதுதான் கேள்வி. அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”.
“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க,அப்பெண்மணி கூறினார் : “ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.” அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

ஜம்இயதுல் உலாமாவை திட்டி தீர்பவர்களில் எத்தனை பேர் சுபஹு தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றுகிறீர்கள்? நிறைவேற்றுபவர்களில் எத்தனை பேர்உங்கள் குடும்பத்தை தொழுகைக்காக எழுப்புகிறீர்கள்?

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாகஇருக்கும் என கூறியுள்ளார்கள் . நாம் நயவஞ்சகன் அல்ல நயவஞ்சக சமுதாயம் (பெரும்பான்மையானவர்கள் என்பதால்..).