Search This Blog

Showing posts with label புலிகள். Show all posts
Showing posts with label புலிகள். Show all posts

14 March 2014

பிரபாகரன், எப்படி கொல்லப்பட்டார்...! - ஒரு புலனாய்வு ரிப்போர்ட்....!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.

அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்றஊகங்கள் இது போன்ற சந்தேகங்களை நியாயப்படுத்துவனவாகவும், வலுப்படுத்துவனவாகவும் உள்ளன.

கட்டுரையின் முதலாம் பாகத்தை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம்.

“ சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..