Pages

17 March 2013

ஹலால் இலச்சினையும் ஜம்மியத்துல் உலமாவின் புத்திசாலித்தனமான முடிவும்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..


2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட
முடியும்(அது நம்மளுக்கு எப்போதோ தெரிந்த விடயம் தான்).

3.ஹலால் மூலம் நிறைய‌ காசு உழைத்தார்கள் என்று உலமா சபையை குற்றம் சாற்றி அச்சபையை கலைக்க பார்த்தார்கள் ..அனால் அது இலாபம் சம்பந்த பட்ட நிறுவனம் இல்லை என்று அவர்கள் "ஹலாலை இலவசமாக தருகிறோம்" என்று கூறியதன் மூலம் அறிவித்துள்ளார்கள்.இது இன்னொரு வெற்றி....

ஏனென்றால் முஸ்லிம்களை சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டு கொண்டிருக்கிறது...இதன் மூலம் முஸ்லிம்கலுக்கு ஏற்படும் பிரச்சனையை போக்க ஒரு தலைமைதுவம் தேவை...அதற்கு தகுதியானவர்கள் தற்பொழுது 3000 பேரை கொண்ட உலமா சபையே...அதனால் எதிரிகள் முஸ்லிம்களை இந்த சபையிடம் இருந்து பிரிக்க முஸ்லிம்களுக்குள் இருக்கும் புல்லுருவிகள் மூலம் பிரச்சினை உண்டாக்கப் பார்கிறார்கள்.
ஏனெறால் ஒரு பாம்பை கொள்வதென்றால் தலையை வெட்டினால் தான் முடியும்....இப்பொழுது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலை உலமா சபையே..அதனால் அதனை பற்றி பிடித்து கொள்ளுங்கள்...இதன் மூலம் முஸ்லிம்களுக்கு நன்மையே இருக்கும்...

ஜம்மியத்துல் உலமாவின் சாணக்கியமான இந்த முடிவை நாம் பாராட்டாமல் இன்னும் எங்க‌ளுக்குள் பிளவு பட்டு இருக்கிறோம் என்றால் எங்க‌ளை நாம் புத்திசாலிகள் என்பதா அல்லது ?????????.......என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம்
 அல்லாஹ் போதுமானவன்....

No comments:

Post a Comment

please encourage us by sending your comments