உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின் போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.
பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.
இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை குறைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.
அதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
No comments:
Post a Comment
please encourage us by sending your comments