Samsung S 6102 காலக்ஸி டூயோஸ் தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது. போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு 3ஜி போனாகவும் செயல்படுகிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன. |
Pages
▼